science news logo

சூரியப் புயல்களை எதிர்கொள்ள அதிநவீன நட்சத்திரத் தொகுதி செயற்திட்டம்!

விண்வெளியில் மனித இனத்தின் தொழிநுட்பக் கட்டமைப்புக்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமை சூரியனின் மேற்பரப்பில் வெளியாகும் சூரியப் புயல்களுக்கு உள்ளது. 2003 ஆண்டு ஏற்பட்ட ஹலோவீன் புயல் என்று பெயரிடப் பட்ட வலிமையான சூரியப் புயலால் குறைந்த பட்சம் $27 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டதாக மதிக்கப் பட்டுள்ளது.

மேலும் சூரியப் புயல்களால் இனிமேல் ஏற்படக் கூடிய இழப்புக்கள், மனித இனத்தின் விண்வெளி சார்ந்த தொழிநுட்பத் தேவைகள் மற்றும் இலத்திரனியல் உட் கட்டமைப்புக்களால் மேலும் அதிகரிக்கவே செய்யும் என்றும் எச்சரிக்கப் படுகின்றது. ஆனால் இதற்கு மாற்றாக இந்த சூரியப் புயல்கள் எப்போது ஏற்படலாம் என முன்கூட்டியே திருத்தமாக அளவிட முயன்றால், ஏற்படக் கூடிய மோசமான பாதிப்பை நாம் தவிர்க்க முடியும் என்றும் கூறப்படுகின்றது.

எனினும் இன்று எம்மிடம் இவ்வாறு முன்கூட்டி அறிவதற்கான வழிமுறை இல்லை என்பது சற்று கலக்கத்தையே ஏற்படுத்துகின்றது. சூரியனுடன் சமாந்தரமான கோட்டில் ஏற்படக் கூடிய CMEs எனப்படும் சூரியப் புயல்கள் மற்றும் கருப்பு நிற புள்ளிகளான Sun Spots போன்றவற்றை அறியும் 13 வித்தியாசமான செயற்திட்டங்கள் தற்போது அமுலில் இருப்பதாக விண்வெளி பாதுகாப்பு மற்றும் பொறியியலுக்கான நாளிதழில் டாக்டர் ஆஸ்கியானாகிஸ் விவரித்துள்ளார்.

இதில் முக்கியமானதாக CMEs இன் 3D மாடலை மீள உருவாக்கி சூரியனின் துருவங்கள் உட்பட அனைத்தையும் கண்காணித்தல் என்பது அமைகின்றது. இது சூரியனின் இயக்கவியலை ஆய்வதன் மூலம் சூரியப் புயல்களை கணிக்கும் முழுமையான முதற்கட்ட அணுகுமுறையாகும். இது தவிர சூரியனுக்கு புதன் கிரகத்தை விட மிக அண்மையில் சென்று ஆய்வு செய்யும் பார்க்கர் சோலார் விண்கலம் மற்றும் SOHO விண்கலம் போன்றவற்றின் தரவுகளும் தீவிர பரீசீலனை செய்யப் பட்டு வருகின்றது. எனினும் சூரியப் பௌதிகவியலைக் கற்பதில் இன்னமும் முக்கிய வெற்றிடங்கள் நிறைய இருப்பதாக டாக்டர் ஆஸ்கியானாகிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தவிர அடிப்படையில் 6 செய்மதிகளைக் கொண்ட நீள்வட்ட நடைபாதை நட்சத்திரத் தொகுதி நுட்பத்தைப் பயன்படுத்தும் திட்டமும் உள்ளது. இந்த நுட்பம் சூரியனைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் செயற்கைக் கோள்களைப் பரப்பவும், நிலையான சுற்றுப்பாதையில் சாத்தியமில்லாத வெவ்வேறு கண்ணோட்டங்களையும், புலத்தையும் வழங்க அனுமதிக்கவும் சுற்றுப்பாதை இயக்கவியலைப் (Orbital dynamics) பயன்படுத்துகிறது.

டாக்டர் அஸ்கியானகிஸ் ஒவ்வொரு செயற்கைக் கோளுக்கும் ஒரு பிரிப்பு நுட்பத்தைப் பயன்படுத்துகிறார், இது “right ascension of the ascending node (RAAN)” நுட்பம் என்று அழைக்கப்படுகிறது, இது SEL (Sun Earth Line) புலத்தை (Coverage) முடிந்தவரை முழுமையானதாகவும் சீரானதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. ஒவ்வொரு செயற்கைக்கோளும் ஒரு மின் உந்துவிசை அமைப்புடன் பொருத்தப்பட்டு, அதன் சுற்றுப்பாதை பாதையை பராமரிக்க வெள்ளியின் ஈர்ப்பு உதவிகளைப் பயன்படுத்தும். ஆய்வறிக்கையின்படி, இந்த அமைப்பு ஒவ்வொரு செயற்கைக் கோள்களுக்கும் இடையே 94% நேரம் தகவல் தொடர்புகளைப் பராமரிக்க முடியும், இது SEL (Sun Earth Line) இல் ஏற்படக் கூடிய எந்தவொரு ஆபத்தான புயல்களுக்கும் செய்மதிப் பொறிமுறை கிட்டத்தட்ட தொடர்ந்து கண்காணிக்க அனுமதிக்கிறது.

ஒவ்வொரு செயற்கைக் கோளும் காந்த மானிகள், எக்ஸ்-கதிர், காமா-கதிர் அறியும் கருவி மற்றும் ஆற்றல்மிக்க துகள் கண்டுபிடிப்புக் கருவி உள்ளிட்ட சென்சார்களின் தொகுப்பைக் கொண்டிருக்கும். இந்த கருவிகள் சூரியனில் இருந்து வரும் அனைத்து சுவாரஸ்யமான (அல்லது ஆபத்தான) நிகழ்வுகளையும் கண்காணிக்கும், இதனால் விஞ்ஞானிகள் பொறியாளர்களுக்கு சாதனங்களை எப்போது அணைக்க வேண்டும் என்று சொல்ல முடியும், இதனால் அவை செயலிழந்து போகும் சேதத்திலிருந்து பாதுகாக்கப்படும்.

2031 ஆமாண்டு 6 செயற்கைக் கோள்களும் ஒரே விண்கப்பலில் விண்ணில் ஏவப்படும். தமது இலக்கை (ஆர்பிட்டரை) இவை சென்றடைய இவற்றுக்கு 4 ஆண்டுகள் தேவைப் படும். $3.8 பில்லியன் டாலர் பெறுமதி கொண்ட இந்த செயற்திட்டத்தால் எதிர்காலத்தில் $10 பில்லியன் டாலர்கள் வரையிலான இழப்புக்களைத் தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *