Subscribe to get access
Read more of this content when you subscribe today.
Read more of this content when you subscribe today.


புதிய ஆய்வொன்றின் படி, 20 மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரே மூதாதையரிடம் இருந்து பரிணமித்த இரு வித்தியாசமான புழு இனங்கள் தமக்கிடையே மரபணுக்களைத் தக்க வைத்துக் கொள்வதிலும் பரிமாறிக் கொள்வதிலும் ஒருமித்த வடிவங்களைக் கொண்டுள்ளன.
“இந்த பரிணாம வளர்ச்சி தூரத்தில், மரபணு வெளிப்பாடு வடிவங்களில் இத்தகைய ஒத்திசைவை நாம் காண முடிந்தது குறிப்பிடத்தக்கது,” என்று சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் மரபணு அறிவியல் பேராசிரியரும், ஆய்வறிக்கையின் இணை-மூத்த ஆசிரியருமான டாக்டர் ராபர்ட் வாட்டர்ஸ்டன் கூறியுள்ளார். “அனைத்தும் எவ்வளவு நன்றாக வரிசையாக அமைந்திருக்கிறது என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்றும் அவர் தெரிவித்தார்.
மரபணு வெளிப்பாட்டு வடிவங்கள் மாறாமல் இருந்தன அல்லது அதனை பரிணாம உயிரியலாளர்கள் பாதுகாக்கப் பட்டவை என்று அழைக்கிறார்கள். ஒரு மாற்றம் பல செல் வகைகளை பாதிக்கக்கூடும் என்று வாட்டர்ஸ்டன் கூறியுள்ளார். “மரபணுக்கள் உயிரினம் முழுவதும் பல செல் வகைகளில் பரவலாக வெளிப் படுத்தப்பட்டால், வெளிப்பாட்டை மாற்றுவது கடினமாக இருக்கலாம், ஆனால் மரபணு வெளிப்பாடு ஒரு செல் வகை அல்லது ஒரு சில செல் வகைகளுக்கு மட்டுப் படுத்தப் பட்டிருந்தால், ஒருவேளை அது வெற்றி பெறக்கூடும்.” என்றும் தெரிவித்தார்.
இரண்டு புழுக்களுக்கு இடையில் மரபணு வெளிப்பாடு வேறுபட்டபோது, சிறப்பு செல் வகைகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உதாரணத்துக்கு தசை அல்லது குடல் போன்ற அடிப்படை செயற்பாடுகளில் ஈடுபடும் செல்களில் வெளிப்பாடு வடிவங்கள் பாதுகாக்கப் படுகின்றன, அதே நேரத்தில் புழுவின் சூழலை உணர்ந்து பதிலளிப்பதில் ஈடுபடும் சிறப்பு செல்களில் வெளிப்பாடு வடிவங்கள் வேறுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்தப் புழுக்கள் அவற்றின் சராசரியாக 20,000 மரபணுக்களில் பலவற்றை மனிதர்கள் உட்பட மிகவும் சிக்கலான உயிரினங்களுடன் பகிர்ந்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரு புழுக்களிலும் உள்ள அனைத்து செல்களும் அடையாளம் காணப்பட்டு வரை படமாக்கப் பட்டுள்ளன. 20 மில்லியன் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி இருந்த போதிலும், இரண்டு புழுக்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உடல் அமைப்புகளையும் செல் வகைகளையும் தக்கவைத்துக் கொள்கின்றன, கிட்டத்தட்ட ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, அவை ஒப்பிடுவதற்கு ஏற்ற பாடங்களாக அமைகின்றன.
கிட்டத்தட்ட 12 மணித்தியாலமாக நடைபெற்ற RNA பரிசோதனையின் போது செல்களில் ஏற்படும் மாற்றத்தை ஆராய்ச்சியாளர்கள் கணித்தனர். இறுதி முடிவாக கவனித்த வேறுபாடுகளில் ஏதேனும் பரிணாம தழுவல் காரணமாக ஏற்பட்டதா அல்லது மரபணு சறுக்கலின் விளைவாக ஏற்பட்டதா என்று சொல்வது கடினம், ஆனால் அங்கு மாற்றங்கள் சீரற்ற முறையில் நிகழ்கின்றன. எனினும் இந்த அணுகுமுறை பரிணாமம் பற்றிய பல பதிலளிக்கப்படாத கேள்விகளை ஆராய அனுமதிக்கும்.”
தகவல் – Phys.org