Subscribe to get access
Read more of this content when you subscribe today.
Read more of this content when you subscribe today.


துல்லியமான அளவீடுகளை மேற்கொள்வதற்காக லேசர் கற்றைகளைக் கையாளும் LISA எனும் பாரிய தொலைநோக்கி பூமிக்கு வெளியே சுற்று வட்டப் பாதையில் அமைக்கப் படவுள்ளது. இதன் முக்கிய பணி பூமியில் இருந்து கண்காணிக்க முடியாத விண்வெளி நிகழ்வுகள் வெளியேற்றும் ஈர்ப்பு அலைகளை (Gravitational waves) அடையாளம் காண்பதாகும்.
மேலும் பூமியில் இதுவரை அமைக்கப் பட்ட ஈர்ப்பு அலை கண்காணிக்கும் தொலை நோக்கிகளை விட மிகப் பிரம்மாண்டமாக 3 விண்வெளி தொலை நோக்கிகள் ஒவ்வொன்றும் 2.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவுக்கு லேசர் கற்றைகளை வெளியேற்றும் விதத்தில் சரியான ஒழுங்கமைவில் விண்ணில் அமைக்கப் படும் விதத்தில் கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது. LISA, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான ESA இன் செயற்திட்டமாகும். இதற்கு முன்பாக Pathfinder செயற்திட்டம் அமுலாக்கி பரிசோதிக்கப் பட்டிருந்தது. இதில் மிக மெல்லிய இரு தங்க கன சதுரங்கள் சுயமாக வீழும் போது அதன் வீழ்ச்சியை 0.01 நானோமீட்டர் அளவுக்கு துல்லியமாக அளக்கப் படமுடியும் என நிரூபணமானது. இவை விண்வெளியில் உள்ள பரந்த லேசர் இலக்குகள் ஆகும். புதிதாக ஏவப்படவுள்ள LISA தொலைநோக்கிகள் 3 உம் தமக்கிடையே பூமியில் இருந்து நிலவு இருக்கும் தூரத்தை விட 6.5 மடங்கு அதிக தூரத்தில் நிறுத்தப் படவுள்ளன.
பூமியில் உள்ள ஈர்ப்பு விசை ஆய்வகங்களைப் போலவே, லேசர் ஒளி LISA தொலை நோக்கிக்கும் முக்கிய அங்கமாகும். ஈர்ப்பு விசை அலைகள் பிரபஞ்சத்தின் முக்கிய வலையமைப்பான கால-வெளியினை சிதைத்து, அதை சுருக்கி நீட்டிக்கின்றன. லேசர்களின் நீளத்தை துல்லியமாக அளவிடுவதன் மூலம், ஈர்ப்பு விசை அலைகள் கடந்து சென்றதா என்பதை இந்த அமைப்பு அறிய முடியும். மேலும், பூமியில் உள்ள ஆய்வகங்களைப் போலல்லாமல், கற்றைகளின் தூரம் அவற்றின் சுற்றுப் பாதையில் சிறிது மாறுபடும், மேலும் அமைப்பு அதை கணக்கில் எடுத்துக்கொள்ளும்.
சற்று பட்ஜெட் சிக்கல் இருந்தாலும் LISA சரியாக இன்னும் 10 வருடங்களில் திட்டமிடப் பட்டதற்கு 2 வருடங்கள் முன்னதாகவே தொடங்கப் படலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. மேலும் LISA இருண்ட பிரபஞ்சத்தில் ஒரு புதிய சாளரத்தைத் திறந்து, இயற்பியலின் அறியப்பட்ட விதிகளை அவற்றின் தீவிரத்திற்கு சோதிக்கும்,” என்று ESA-வின் அறிவியல் இயக்குனர் பேராசிரியர் கரோல் முன்டெல் தெரிவித்துள்ளார்.
விண்வெளி நிகழ்வுகளான கருந்துளைகளுக்கு இடையேயான மோதல், White Dwaf எனப்படும் வெள்ளைக் குள்ள இருமை நட்சத்திரங்கள், அவற்றைச் சுற்றி வரும் கோள்கள் எனப் பல நிகழ்வுகளின் போது வெளியேறும் ஈர்ப்பு அலைகளை LISA அளவிடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
தகவல் – iflscience.com