Subscribe to get access
Read more of this content when you subscribe today.
Read more of this content when you subscribe today.

4 விண்வெளி வீரர்களை 10 நாள் பயணமாக நிலவைச் சுற்றி அனுப்பும் ஆர்டெமிஸ் II திட்டத்தைத் தொடங்க நாசா தயாராகி வருகிறது. இருப்பினும், மீண்டும் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது வெப்பக் கவசத்தின் செயல்திறன், சூரியக் கதிர்வீச்சுக்கு ஆளாவது, மற்றும் உயிர் காக்கும் அமைப்புகளின் நம்பகத்தன்மை உள்ளிட்ட முக்கிய அபாயங்கள் நீடிக்கின்றன. அமெரிக்க அரசாங்கத்தின் வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (Aeronautics and Space Administration), புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏப்ரல் மாத தொடக்கத்தில் அதிலும் ஏப்ரல் Read more

இந்தியாவின் வேத காலத்தில் வானியல் அறிவு என்பது மதச் சடங்குகள், காலக் கணிப்பு, வேளாண்மை, தத்துவம் ஆகிய அனைத்துத் துறைகளுடனும் ஆழமாக இணைந்திருந்த ஒரு அறிவியல் பண்பாட்டு மரபாகும். 4 வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள் குறித்த நேரடி குறிப்புக்கள் உள்ளன. சூரியன் பிரபஞ்சத்தின் உயிர்சக்தியாக வர்ணிக்கப் பட்டதுடன் சடங்குகளில் முக்கியமானதான யாகங்களைச் செய்வதற்கு சரியான காலம் அதாவது திதி மற்றும் நட்சத்திரம் அவசியமாகவும் கருதப் பட்டது. இதனால் வானியல் கணிப்புக்கள் Read more

ஆல்பா துணிக்கைகளை வெளிப்படுத்தும் கதிர்வீச்சு பகுதிக்கும் அவை ஊடுருவிச் செல்லக் கூடிய விதத்தில் நாக சல்பைட்டால் ஆன திரைக்கும் (fluorescent screen) இடையே தங்கத்தினால் ஆன மெல்லிய திரை ஒன்று வைக்கப் பட்ட போது அதை ஊடுருவாது திசை திருப்பப் பட்ட ஆல்பா கதிர்களின் அளவு நுணுக்குக் காட்டியால் நோக்கப் பட்டது. இதன் போது தோம்சனின் பிளம் புட்டிங் மாதிரிப்படி அணு முழுக்க பரவிய மின்சார மேகம் போல இருக்குமென நம்பினர். ஆகவே அனைத்து ஆல்பா துகள்களும் Read more

பிரபஞ்சவியலில் (Cosmology) அண்டங்களில் (Galaxies) தென்படும் அசாதாரணமான இயக்கங்களுக்குக் காரணம் என்று கருதப் படும் கரும் பொருள் (Dark Matter) என்ற பதம் மும்மொழியப் பட்டு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு ஆகியுள்ள நிலையில் அதன் இருப்புக்கான ஆதாரம் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாசாவின் Fermi காமா கதிர் விண் தொலைக் காட்டி சமீபத்தில் அடையாளம் கண்ட அதிசக்தி காமா கதிர்களை அடிப்படையாகக் கொண்டு டோக்கியோ பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.. கரும்பொருள் துணிக்கைகள் மோதும் போதும் Read more

பொதுவாக மனிதர்கள் தம்மை ஒரு பாம்பு அல்லது சிலந்தி கடித்தால் என்னவாகும் எனப் பயப்படுவது உண்டு. ஆனால் இதுவரை யாராவது ஒரு சிறிய கருந்துளை மனித உடலை ஊடறுத்துச் செல்ல முயன்றால் என்னவாகும் என சிந்தித்தது உண்டா? பழமையான கருந்துளை ஒன்று மனித உடலை ஊடறுத்துச் செல்ல முயன்றால் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆய்வு கரும் பொருள் (Dark Matter) தொடர்பான கல்விக்கு உதவக் கூடும் என்று சொல்லப் படுகின்றது. Primordial black holes அதாவது ஆதிகால Read more

விண்வெளியில் தனித்து விடப் பட்ட குள்ள அண்டம் (Dwarf Galaxy) ஒன்றினை சமீபத்தில் ஸ்பெயின் நாட்டு வானியலாளர்கள் தமது இரு மீட்டர் நீளமான இரட்டைத் தொலைக் காட்டியான TTT3 மூலம் அவதானித்து ஆழமான ஆப்டிக்கல் புகைப் படம் ஒன்றினைப் பெற்றுள்ளனர். நவம்பர் 10 ஆம் திகதி arXiv என்ற பத்திரிகை ஊடகத்தில் வெளியாகி உள்ள இது தொடர்பான தகவலில் இந்த அண்டத்தில் நட்சத்திரங்களின் தோற்றம் நிகழ்வது அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. 1883 இல் முதலில் கண்டுபிடிக்கப் பட்ட NGC Read more

விண்பூகோள ஒருங்கிணைப்பு வலது ஏற்ற இறக்கங்கள் குறித்த மேலதிக விபரங்கள் மற்றும் விண்பூகோளத்தின் எந்தவொரு நட்சத்திரம் அல்லது வேறு பொருளின் திருத்தமான இருப்பை அறிவது எவ்வாறு என்பது போன்ற தகவல்களைப் பார்க்கும் முன்னர் வானியலின் சில அடிப்படைத் தகவல்களை எளிய தமிழில் காண்போம்.. வானில் கண்ணால் பார்க்கக் கூடிய அனைத்துப் பொருட்களினதும் இயக்கம் குறித்த விஞ்ஞானமே வானியலாகும். நவீன மனிதன் இந்தப் பார்வையை மிகவும் கூர்மையானதாக மாற்றி வருகின்றான். அதாவது வானியல் ஆய்வைத் தமது தொழிலாகக் கொண்டுள்ள Read more

சற்று பெரிய விண்கல் அல்லது பெரியதொரு குறுங்கோள் (Comet) எனவும் அழைக்கப் படக்கூடிய 3I/ATLAS என்ற வால்வெள்ளி சமீபத்தில் சூரியனை அண்மித்தது. இவ்வருடம் கோடைக் காலத்தில் முதன் முதலில் அவதானிக்கப் பட்ட குறித்த இந்த குறுங்கோள் சமீபத்தில் சூரியனை அண்மித்த போது அதன் வேகம் அதிகரித்ததுடன் (ஆர்முடுகல் – Acceleration) அதன் நிறமும் நீல நிறத்தில் மாறியிருந்தது அவதானிக்கப் பட்டுள்ளது. 3I/ATLAS இன் வேக அதிகரிப்புக்கு ஈர்ப்பு சக்தி காரணம் இல்லை என அறியப் பட்டது ஐன்ஸ்டீனின் Read more

கடந்த தொடரில் பூமத்திய ரேகை, அட்சரேகை, தீர்க்க ரேகை போன்றவை குறித்தும் கிறீன்வீச் தீர்க்க ரேகை அடிப்படையாக வைத்து பூமியில் ஒவ்வொரு நாடுகளினதும் நேரங்கள் கணிக்கப் படுவது எவ்வாறு என்றும், இலையுதிர் கால மற்றும் வசந்த கால சம இரவு பகல்கள் குறித்தும் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி, நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 4 இத்தொடரில் விண்பூகோளங்கள் குறித்து மேலும் பார்ப்போம். பூமி தனது அச்சில் சுழல்வதால் புறத்தே காணப் படும் விண்பூகோளம் எதிர்த்திசையில் நகர்வது Read more

சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்ட மிகப் பெரும் கருந்துளை மோதுகைகளின் விளைவாகத் தோன்றிய புதிய கருந்துளை சூரியனை விட 225 மடங்கு அதிக திணிவை உடையது ஆகும். இத்தகவல் அப்பகுதியில் இருந்து வரும் Gravitational Waves எனப்படும் ஈர்ப்பு அலைகள் மூலம் கண்டறியப் பட்டது. மேலும் இதுவரை அறியப் பட்ட இது போன்ற மிக வலுவான மோதுகைகளில் இதுவே வலிமை மிக்கது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. மிகவும் தீவிரமான இந்த மோதுகையின் அவதானிப்பு மூலம் தெரிய வருவது என்னவென்றால் Read more