Category: Astronomy

  • நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 4

    நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 4
    ,

    கடந்த தொடரில் Ecliptic மற்றும் Axial Tilt அதன் காரணமாக ஏற்படும் பருவ நிலை வேறுபாடுகள் மற்றும் Sidereal Day, Solar Day குறித்தும் சம இரவு பகல்கள் குறித்தும் பார்த்தோம். அதற்கான இணைப்பு : நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 3 பூமத்திய ரேகையுடன், Ecliptic இணையும் புள்ளிகளில் தான் இரு Equinoxes உம் அமைவது குறிப்ப்பிடத்தக்கது. இதுவும் Ecliptic பூமத்திய ரேகைக்கு சமாந்தரமாக அல்லாது 23.4 பாகை கோணம் சாய்வில் அமைந்திருப்பதற்கு ஒரு சான்றாகும். Read more

  • சமீபத்தில் மனிதர்க்குத் தென்பட்ட விண்பொருள் ஓர் ஏலியன் ஓடமா?

    சமீபத்தில் மனிதர்க்குத் தென்பட்ட விண்பொருள் ஓர் ஏலியன் ஓடமா?

    ஜூலை 1 ஆம் திகதி சூரியனை நோக்கி விரைந்து வந்த வித்தியாசமான விண்பொருளான 3I/ATLAS, ஓர் ஏலியன் ஓடமாக இருக்கும் தன்மைகளைக் கொண்டிருந்தது என வானியலாளர்கள் தற்போது தெரிவித்துள்ளனர். இதுவரை 3 விண்வெளி பொருட்களே (Interstellar objects) இவ்வாறு அவதானிக்கப் பட்டு வகைப் படுத்தப் பட்டுள்ளன. இவை அனைத்தும் சூரிய குடும்பத்துக்கு வெளியே இருந்து சூரியனை நோக்கி வந்து சென்றுள்ளன. இத்தன்மை தான் இவற்றை ஏலியன் ஓடங்கள் என ஐயம் கொள்ள முதற் காரணியாக உள்ளது. மணிக்கு Read more

  • நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 3

    நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 3

    கடந்த தொடரில் Ecliptic என்றால் என்னவென்பது குறித்தும் லீப் வருடம் குறித்தும் Transit நிகழ்வு குறித்தும் முக்கியமாகப் பார்த்தோம். அதற்கான இணைப்பு – நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 2 சூரியனைப் பூமி 23.4 பாகை கோணத்தில் சாய்ந்த நிலையில் தான் சுற்றி வருகின்றது. அதாவது பூமியின் வட தென் துருவ அச்சானது Ecliptic இற்கு செங்குத்தாக அமைந்திருக்கவில்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால் பூமியின் கிடை அச்சான Equatorial Plane, Ecliptic உடன் இணைந்து காணப் படவில்லை. Read more

  • பிரபஞ்சத்தை வெற்றிகரமாக ஊடுருவி படம் எடுத்த நியூ ஹாரிசன்ஸ் விண்கலம்!

    பிரபஞ்சத்தை வெற்றிகரமாக ஊடுருவி படம் எடுத்த நியூ ஹாரிசன்ஸ் விண்கலம்!

    புளூட்டோ கிரகத்தை ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு ஏவப்பட்ட நியூஹாரிசன்ஸ் விண்கலம் தற்போது பூமியில் இருந்து 5.5 பில்லியன் மைல்களுக்கு அப்பால் கியூப்பர் பட்டை எனப்படும் விண்கற்கள் தொகுதியில் பயணித்து வருகின்றது. சமீபத்தில் இந்த இடத்தில் இருந்து கொண்டு சூரிய குடும்பத்துக்கு அப்பால் உள்ள ஆழமான பிரபஞ்சத்தை வெற்றிகரமாக ஊடுருவி படம் எடுத்துள்ளது இந்த விண்கலம். இதன் மூலம் ஆழமான பிரபஞ்சத்தை முதன் முதல் வரைபடமாக்க (Navigation) வானியலாளர்கள் குழுவுக்கு இயன்றுள்ளது. இத்தகவல் Astronoical Journal என்ற பத்திரிகையில் Read more

  • நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 2

    நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 2

    முந்தைய தொடருக்கான இணைப்பு – நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 1 இரவு வானம் குறித்த மனித அறிவு வளரத் தொடங்க விவசாயம், கடற் பயணம் மற்றும் தத்துவம் போன்ற துறைகளும் சேர்ந்தே முன்னேற்றம் கண்டன. 17 ஆம் நூற்றாண்டில் தொலைக் காட்டியின் கண்டுபிடிப்பு இதற்கு மேலும் வலுச் சேர்த்ததுடன் பல தலைமுறைகளாக மிகச் சிறந்த வரைகலை நிபுணர்கள், இசையமைப்பாளர்கள், மற்றும் இலக்கிய ஆர்வலர்களின் சிந்தனைக்கு விருந்தாகவும் அமைந்துள்ளது. நவீன யுகத்தில் நகரங்களில் உள்ள ஒளி விளக்குகளின் Read more

  • விண்ணில் அமையவுள்ள ஈர்ப்பு அலைகளைக் கண்டுபிடிக்கும் பாரிய தொலைநோக்கி

    விண்ணில் அமையவுள்ள ஈர்ப்பு அலைகளைக் கண்டுபிடிக்கும் பாரிய தொலைநோக்கி

    துல்லியமான அளவீடுகளை மேற்கொள்வதற்காக லேசர் கற்றைகளைக் கையாளும் LISA எனும் பாரிய தொலைநோக்கி பூமிக்கு வெளியே சுற்று வட்டப் பாதையில் அமைக்கப் படவுள்ளது. இதன் முக்கிய பணி பூமியில் இருந்து கண்காணிக்க முடியாத விண்வெளி நிகழ்வுகள் வெளியேற்றும் ஈர்ப்பு அலைகளை (Gravitational waves) அடையாளம் காண்பதாகும். மேலும் பூமியில் இதுவரை அமைக்கப் பட்ட ஈர்ப்பு அலை கண்காணிக்கும் தொலை நோக்கிகளை விட மிகப் பிரம்மாண்டமாக 3 விண்வெளி தொலை நோக்கிகள் ஒவ்வொன்றும் 2.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவுக்கு Read more

  • பிரபஞ்ச கதிரியக்கம் எங்கிருந்து வருகின்றது? : பதிலை நோக்கி வானியலாளர்கள்

    பிரபஞ்ச கதிரியக்கம் எங்கிருந்து வருகின்றது? : பதிலை நோக்கி வானியலாளர்கள்

    Cosmic rays எனப்படும் பிரபஞ்சக் கதிரியக்கம் சரியாக எங்கிருந்து வருகின்றது என்பது வானியலாளர்கள் மத்தியில் நூற்றாண்டாக நிலவி வரும் கேள்வியாகும். மிச்சிகன் மாநில பல்கலைக் கழக வான் பௌதிகவியலாளர்கள் அண்மையில் வெளியிட்ட மீளாய்வு பதிப்பு ஒன்று இதற்கான பதிலை வழங்க உதவியாக உள்ளது. ஒளியின் வேகத்துக்கு அண்மையில் பயணிக்கக் கூடிய பிரபஞ்சக் கதிர்களான Cosmic rays அதி சக்தி துகள்களால் (High energy particles) ஆனவையாகும்.1912 ஆமாண்டு கண்டு பிடிக்கப் பட்டதில் இருந்து இவை எமது பால்வெளி Read more

  • நியூட்ரோன் நட்சத்திரங்களின் இணைவில் தோன்றும் கருந்துளை தொடர்பில் புதிய மீளாய்வு

    நியூட்ரோன் நட்சத்திரங்களின் இணைவில் தோன்றும் கருந்துளை தொடர்பில் புதிய மீளாய்வு

    இரு நியூட்ரோன் நட்சத்திரங்கள் இணையும் போது தோன்றும் மிகவும் சக்தி வாய்ந்த ஜெட் போன்ற அதிவேக காமா கதிர்வீச்சை வெளியிட்டவாறு தோன்றும் கருந்துளைகள் எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்து சமீபத்திய அதிதிறன் கணிணி உருவகப் படுத்துதல் (Super computer simulation) முறை மூலம் விளக்க முற்பட்டுள்ளனர் வானியலாளர்கள். மிக முக்கியமான விண் பௌதிகவியல் கூறான நியூட்ரோன் நட்சத்திரங்களின் இணைவு மீதான புதிய மற்றும் மிக இளமையான வான்பௌதிகவியல் ஆட்கூறு (Coordinates) பார்வைகள் (observation) ஒரே இடத்தில் இருந்து Read more

  • சூரியப் புயல்களை எதிர்கொள்ள அதிநவீன நட்சத்திரத் தொகுதி செயற்திட்டம்!

    சூரியப் புயல்களை எதிர்கொள்ள அதிநவீன நட்சத்திரத் தொகுதி செயற்திட்டம்!

    விண்வெளியில் மனித இனத்தின் தொழிநுட்பக் கட்டமைப்புக்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமை சூரியனின் மேற்பரப்பில் வெளியாகும் சூரியப் புயல்களுக்கு உள்ளது. 2003 ஆண்டு ஏற்பட்ட ஹலோவீன் புயல் என்று பெயரிடப் பட்ட வலிமையான சூரியப் புயலால் குறைந்த பட்சம் $27 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டதாக மதிக்கப் பட்டுள்ளது. மேலும் சூரியப் புயல்களால் இனிமேல் ஏற்படக் கூடிய இழப்புக்கள், மனித இனத்தின் விண்வெளி சார்ந்த தொழிநுட்பத் தேவைகள் மற்றும் இலத்திரனியல் உட் கட்டமைப்புக்களால் மேலும் அதிகரிக்கவே செய்யும் Read more

  • நட்சத்திரப் பயணங்கள் : எளிய தமிழில் வானியல்

    நட்சத்திரப் பயணங்கள் : எளிய தமிழில் வானியல்

    மனிதன் நாகரீகம் அடைய முன்பே கற்காலத்தில் இருந்து இன்று வரை விண்வெளி என்பது மனித அறிவுக்கு மிகவும் ஆச்சரியமளிக்கக் கூடியதாகவே இருக்கின்றது. ஆதியில் மனிதனால் இதனைப் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்ததாலும், அதனால் ஏற்பட்ட பயத்தினாலும் இயற்கையின் கூறுகளை வழிபடத் தொடங்கினான் என்றும் அதனால் ஏற்பட்டதே சமய நம்பிக்கைகள் என்றும் இன்றும் கருதுபவர்கள் இருக்கின்றனர். ஆனாலும் நாகரீகங்கள் மலரத் தொடங்கிய போது கூடவே மனித அறிவியலும் சேர்ந்தே வரலாற்றில் வளர்ந்து வந்துள்ளது. இதற்கு சான்றாக இந்து சமயத்தை Read more