பறக்க மறந்த டைனோசர் இனம்! : சுவடு கண்டுபிடிப்பு

சமீபத்தில் பறக்க மறந்த டைனோசர் இனத்தின் சுவடுகளை டெல் அவிவ் பல்கலைக் கழகத்தின் இயற்கை வரலாற்றியல் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் அடையாளம் கண்டுள்ளார். 160 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் இறகுகளுடன் வாழ்ந்ததாகக் கருதப்படும் இந்த டைனோசர் இனத்தின் சுவடுகள் கிடைப்பது மிக அரிதான ஒன்றாகும்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் சுவட்டின் இனம் டைனோசர்கள் மற்றும் ஆதியில் இருந்த பறவைகளுக்கு இடையே இறகுடன் காணப் பட்ட ஆனால் பறக்கும் ஆற்றலை இழந்து விட்ட டைனோசரின் உடையது என்றும் இந்த சுவடு பறவைகளின் பரிமாண வளர்ச்சியைக் கணிப்பதில் முக்கியமானதாகும் என்றும் கூறப்படுகின்றது. மிக ஆதியில் சில பெரிய பறவை இனங்கள் கூட பறக்கும் ஆற்றலைக் கொண்டிருந்த நிலையிலும் பின்னர் அடுத்து வந்த இனங்கள் அதை மறந்தும் உள்ள நிலையில் இன்று பெரும்பாலும் பறக்கும் ஆற்றலைக் கொண்டுள்ள பறவைகளின் பரிணாமமானது மிகச் சிக்கலானதாகும் என இந்த ஆராய்ச்சிக் குழு கருதுகின்றது.

Communications Biology என்ற அறிவியல் பத்திரிகையில் வெளியான இந்த ஆய்வினை டாக்டர் யோசெஃப் கியாட் தலமையில் டெல் அவிவ் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் விலங்கியல் (Zoology) பள்ளி மேற்கொண்டது. Ornithology எனப்படும் பறவையியலில் வல்லுரான டாக்டர் கியாட் விளக்கம் அளிக்கும் போது 240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிற ஊர்வன டைனோசர் இனங்களில் இருந்து புதிய வகை டைனோசர் இன வரிசை பிளவு பட்டதாகவும், விரைவில் இவற்றில் சில டைனோசர்கள் இறகுகளுடன் பரிணாமம் அடைந்ததாகவும் தெரிவித்தார். பறப்பதற்காகவும், உடல் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்காகவும் இறகுகள் பயன்பட்டதுன் இவை எடையில் குறைந்ததாகவும் அதே நேரம் புரோட்டினால் ஆன வலிமையான ஆர்கனிக் கட்டமைப்பைக் கொண்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Pennaraptora எனப்படும் இன்றைய நவீன பறவைகளுக்கான மூதாதை இனமே 66 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற பாரிய உயிரின அழிப்பின் போது அதாவது Msozoic era நிறைவுற்ற போது தப்பிப் பிழைத்த டைனோசர் இனத்தின் ஒரே நீட்சியாகும். ஆனால் இன்று பூமியில் வாழும் இறக்கைகள் இருந்தும் பறக்க முடியாத ஆஸ்ட்றிச்ஸ் மற்றும் பென்குயின்களுக்கு இணையாக குறித்த டைனோசர் இனமான பென்னரப்டோரா இன் நீட்சியில் ஆரம்பத்தில் வாழ்ந்த பறவைகளுக்கு பறப்பதற்கான இறகுகள் வளர்ந்த போதும் சுற்றுச் சூழல் மாறுபாட்டால் உடனே பறக்க முடியவில்லை.

கிழக்கு சீனாவில் கண்டு பிடிக்கப் பட்ட 9 சுவடுகளில் அனைத்தும் இந்த இறக்கையுடைய பென்னரப்டோரா இனத்தினுடைய அன்கியோர்னிஸ் என்ற டைனோசரினுடையது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த சுவட்டில் இறக்கைகள் இருந்ததற்கு ஆதாரமாக இறக்கை அமைப்புடைய வெள்ளை நிற இறகுகளில் கருப்பு நிற ஸ்பாட் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த இறக்கை கட்டமைப்பில் உள்ள நிறங்களின் தன்மை அதன் இறகுகளின் முழுமையான கட்டமைப்பை அறிய உதவியுள்ளதுடன் இது அந்த பறவை பறக்கக் கூடியதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதிலும் முக்கிய பங்கை வகிக்கின்றது.