computerized picture of a kilonova

நியூட்ரோன் நட்சத்திரங்களின் இணைவில் தோன்றும் கருந்துளை தொடர்பில் புதிய மீளாய்வு

இரு நியூட்ரோன் நட்சத்திரங்கள் இணையும் போது தோன்றும் மிகவும் சக்தி வாய்ந்த ஜெட் போன்ற அதிவேக காமா கதிர்வீச்சை வெளியிட்டவாறு தோன்றும் கருந்துளைகள் எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்து சமீபத்திய அதிதிறன் கணிணி உருவகப் படுத்துதல் (Super computer simulation) முறை மூலம் விளக்க முற்பட்டுள்ளனர் வானியலாளர்கள்.

மிக முக்கியமான விண் பௌதிகவியல் கூறான நியூட்ரோன் நட்சத்திரங்களின் இணைவு மீதான புதிய மற்றும் மிக இளமையான வான்பௌதிகவியல் ஆட்கூறு (Coordinates) பார்வைகள் (observation) ஒரே இடத்தில் இருந்து வரும் வேறுபட்ட சமிக்ஞைகளைப் பகுப்பாய்வு செய்கின்றது.

இரு நியூட்ரோன் நட்சத்திரங்கள் இணையும் போது அவை மிக வலிமையான ஈர்ப்பு அலைகள் (Gravitational waves), நியூட்ரினோக்கள் மற்றும் முழு மின்காந்த நிறமாலை ஊடாக கதிர்வீச்சையும் வெளியிடுகின்றன. இவற்றை கண்டுபிடிக்க ஆய்வாளர்களுக்கு ஈர்ப்பு அலை உணர் கருவி, நியூட்ரினோ தொலைக் காட்டிகள் மற்றும் ஒளியைக் கண்டு பிடிக்க சாதாரண தொலைக் காட்டிகள் என்பவை தேவைப் படுகின்றன.

இயற்கையில் மிகவும் வேறுபட்ட இந்த ஆய்வகங்களை ஒருங்கிணைக்க, எதிர்பார்க்கப்படும் சமிக்ஞைகளின் துல்லியமான மாதிரிகள் மற்றும் கணிப்புகள் அவசியம். இந்நிலையில் “ஜப்பானில் உள்ள ஃபுகாகு சூப்பர் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி, இன்றைய நிலையில் அறியப் பட்ட பைனரி நியூட்ரான் நட்சத்திர இணைப்பின் மிக நீண்ட மற்றும் மிகவும் சிக்கலான உருவகப்படுத்துதலை (Simulation) நாங்கள் செய்துள்ளோம்.” என வான்பௌதிகவியல் ஆய்வாளர் கோட்டா ஹயாஷி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆய்வு ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டின் விளைவுகள், நியூட்ரினோ உமிழ்வு மற்றும் ஒன்றிணைந்த நியூட்ரான் நட்சத்திரங்களுக்குள் அதிக அடர்த்தி கொண்ட பொருளுடன் வலுவான காந்தப்புலங்களின் தொடர்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. என்றும் அவர் கூறியுள்ளார். இந்த மீளாய்வை Physical Review Letters இதழ் ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும் இது தொடர்பான முழுமையான விபரங்கள் arXiv preprint server இல் தற்போது காணக் கிடைக்கின்றன.

பொதுவாக நட்சத்திரங்களின் உள் மையத்தில் இரும்பு போன்ற இலகுவான தனிமங்களே உருவாக முடியும். இரும்பை விடக் கனமான தங்கம் போன்ற தனிமங்களை கிலோநோவா எனப்படும் மிக வலிமையான கதிர்வீச்சு உற்பத்தி செய்கின்றது. இந்நிலையில் 2017 ஆமாண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி இரு நியூட்ரோன் நட்சத்திரங்களின் மோதுகை முதன் முறையாக அவற்றின் ஈர்ப்பு அலைகள் மூலம் கண்டுபிடிக்கப் பட்டது. இதன்போது குறித்த கோட்பாடுகள் உறுதி செய்யப் பட்டன.