Subscribe to get access
Read more of this content when you subscribe today.
Read more of this content when you subscribe today.

பொதுவாக மனிதர்கள் தம்மை ஒரு பாம்பு அல்லது சிலந்தி கடித்தால் என்னவாகும் எனப் பயப்படுவது உண்டு. ஆனால் இதுவரை யாராவது ஒரு சிறிய கருந்துளை மனித உடலை ஊடறுத்துச் செல்ல முயன்றால் என்னவாகும் என சிந்தித்தது உண்டா? பழமையான கருந்துளை ஒன்று மனித உடலை ஊடறுத்துச் செல்ல முயன்றால் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆய்வு கரும் பொருள் (Dark Matter) தொடர்பான கல்விக்கு உதவக் கூடும் என்று சொல்லப் படுகின்றது. Primordial black holes அதாவது ஆதிகால

விண்வெளியில் தனித்து விடப் பட்ட குள்ள அண்டம் (Dwarf Galaxy) ஒன்றினை சமீபத்தில் ஸ்பெயின் நாட்டு வானியலாளர்கள் தமது இரு மீட்டர் நீளமான இரட்டைத் தொலைக் காட்டியான TTT3 மூலம் அவதானித்து ஆழமான ஆப்டிக்கல் புகைப் படம் ஒன்றினைப் பெற்றுள்ளனர். நவம்பர் 10 ஆம் திகதி arXiv என்ற பத்திரிகை ஊடகத்தில் வெளியாகி உள்ள இது தொடர்பான தகவலில் இந்த அண்டத்தில் நட்சத்திரங்களின் தோற்றம் நிகழ்வது அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. 1883 இல் முதலில் கண்டுபிடிக்கப் பட்ட NGC

விண்பூகோள ஒருங்கிணைப்பு வலது ஏற்ற இறக்கங்கள் குறித்த மேலதிக விபரங்கள் மற்றும் விண்பூகோளத்தின் எந்தவொரு நட்சத்திரம் அல்லது வேறு பொருளின் திருத்தமான இருப்பை அறிவது எவ்வாறு என்பது போன்ற தகவல்களைப் பார்க்கும் முன்னர் வானியலின் சில அடிப்படைத் தகவல்களை எளிய தமிழில் காண்போம்.. வானில் கண்ணால் பார்க்கக் கூடிய அனைத்துப் பொருட்களினதும் இயக்கம் குறித்த விஞ்ஞானமே வானியலாகும். நவீன மனிதன் இந்தப் பார்வையை மிகவும் கூர்மையானதாக மாற்றி வருகின்றான். அதாவது வானியல் ஆய்வைத் தமது தொழிலாகக் கொண்டுள்ள

சற்று பெரிய விண்கல் அல்லது பெரியதொரு குறுங்கோள் (Comet) எனவும் அழைக்கப் படக்கூடிய 3I/ATLAS என்ற வால்வெள்ளி சமீபத்தில் சூரியனை அண்மித்தது. இவ்வருடம் கோடைக் காலத்தில் முதன் முதலில் அவதானிக்கப் பட்ட குறித்த இந்த குறுங்கோள் சமீபத்தில் சூரியனை அண்மித்த போது அதன் வேகம் அதிகரித்ததுடன் (ஆர்முடுகல் – Acceleration) அதன் நிறமும் நீல நிறத்தில் மாறியிருந்தது அவதானிக்கப் பட்டுள்ளது. 3I/ATLAS இன் வேக அதிகரிப்புக்கு ஈர்ப்பு சக்தி காரணம் இல்லை என அறியப் பட்டது ஐன்ஸ்டீனின்

கிரிமியன் விரிகுடாவில் உள்ள தொல்பொருள் ஆய்வுப் பகுதியான ஸ்டார்சேலே இல் அண்மையில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கிடைத்த அரிதான DNA சான்றுகளின் மூலம் நியண்டெர்தால் மனித் மூதாதை இனம் ஐரோப்பாவில் இருந்து ஆசியாவுக்கு இடம்பெயர்ந்ததற்கு வலுவான ஆதாரம் கிடைத்துள்ளது. மத்திய மேல் பேலியோலித்திக் காலப் பகுதி என அறியப் படும் இந்தக் காலப் பகுதியில் தான் நியாண்டெர்தால் மனித இனத்தின் மறைவும், நவீன மனிதனின் முன்னோடி இனமான ஹோமோ சேப்பியன்ஸ் பூமியில் ஆதிக்கம் செலுத்தவும் தொடங்கியது

கடந்த தொடர்பில் கதிர்வீச்சுக்கள் தொடர்பான சில தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி.. இரசாயனவியலின் அடித்தளம் மூலகங்கள் (Elements) ஆகும். அணுக்கரு : நம் கண்ணுக்குத் தெரியும் சின்னஞ்சிறு உலகம் : பகுதி 7 எம்மைச் சுற்றி இருக்கும் பதார்த்தங்களின் மிகப் பெருமளவு இந்த மூலகங்களின் சேர்க்கையாக உள்ளது. இதிலும் முக்கியமாக கார்பன், ஹைட்றஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் வெவ்வேறு விதங்களில் இணைந்து பல பதார்த்தங்களாக (Substance) உருவாகி உள்ளன. 20 ஆம் நூற்றாண்டு உதயமாகும் வரை அணுக்களை

வடக்கு கடலின் தென் பகுதியில் அமைந்துள்ள சில்வர்பிட் பள்ளத்தாக்கு (Crater) எவ்வாறு தோன்றியிருக்கலாம் என கடந்த ஒரு தசாப்தமாக விஞ்ஞானிகள் மத்தியில் நிலவி வந்த விவாதம் முடிவுக்கு வந்துள்ளது. 43 தொடக்கம் 46 மில்லியன் வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் வீழ்ந்த விண்கல் அல்லது வால்வெள்ளி காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கு புதிய சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன. டாக்டர் உயிஸ்டீன் நிக்கல்சன் என்ற எடின்பர்க் பல்கலைக் கழக விஞ்ஞானி தலைமையில் மேற்கொள்ளப் பட்ட பூகோள ஆய்வு முறைகளான Seismic

கடந்த தொடரில் பூமத்திய ரேகை, அட்சரேகை, தீர்க்க ரேகை போன்றவை குறித்தும் கிறீன்வீச் தீர்க்க ரேகை அடிப்படையாக வைத்து பூமியில் ஒவ்வொரு நாடுகளினதும் நேரங்கள் கணிக்கப் படுவது எவ்வாறு என்றும், இலையுதிர் கால மற்றும் வசந்த கால சம இரவு பகல்கள் குறித்தும் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி, நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 4 இத்தொடரில் விண்பூகோளங்கள் குறித்து மேலும் பார்ப்போம். பூமி தனது அச்சில் சுழல்வதால் புறத்தே காணப் படும் விண்பூகோளம் எதிர்த்திசையில் நகர்வது

மேலே படத்தில் இருப்பது – கெயித் சொக்மேன் 20 வருடங்களாக ஆய்வு செய்த கொலராடோ மெயாடோவ் வனப்பகுதி வடக்கு கரோலினாவின் சேப்ப ஹில் பல்கலைக் கழகத்தின் புதிய ஆய்வு ஒன்று மனித இனத்தால் அல்லது வேறு காரணிகளால் பாதிக்கப் படாத நிலப் பகுதிகளில் கூட பூச்சியினங்களின் சனத்தொகை வேகமாக அருகி வருவதாகத் தெரிவிக்கின்றது. இதனால் இப்பகுதிகளில் பூச்சியினங்களில் தங்கியிருக்கும் சுற்று சூழலியலுக்கு (Eco system) ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் குறித்து சுற்று சூழல் ஆர்வலர்கள் கவலை கொண்டுள்ளனர். UNC-சேப்பல்

தண்ணீரில் இதுவரை பிளாஸ்டிக் மாசினைக் கண்டறியும் தொழிநுட்பம் கடினமானதாகவும், மெதுவானதாகவும், விலை உயர்ந்ததாகவும், வினைத்திறன் அற்றதாகவுமே இருந்து வந்தது. இந்நிலையில் தண்ணீரில் பயன்படுத்தப் படும் பொறிமுறை முடுக்கப் பட்ட பக்டீரியா (Engineered Bacteria) இதற்கு மிகத் திருத்தமான ஒரு தீர்வைத் தந்துள்ளது. தண்ணீர் மாதிரிகளில் இந்த பக்டீரியா பொறிமுறை பயன்படுத்தப் படும் போது அது கண்ணுக்குத் தெரியாத மைக்ரோ பிளாஸ்டிக் மாசுகளுடன் தாக்கத்தை ஏற்படுத்தினால் உடனடியாக பச்சை நிறத்தில் ஒளிர்வதன் மூலம் அதனை இனம் காண்கின்றது. மைக்ரோ