Subscribe to get access
Read more of this content when you subscribe today.
Read more of this content when you subscribe today.


இந்தியாவின் வேத காலத்தில் வானியல் அறிவு என்பது மதச் சடங்குகள், காலக் கணிப்பு, வேளாண்மை, தத்துவம் ஆகிய அனைத்துத் துறைகளுடனும் ஆழமாக இணைந்திருந்த ஒரு அறிவியல் பண்பாட்டு மரபாகும். 4 வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள் குறித்த நேரடி குறிப்புக்கள் உள்ளன.
சூரியன் பிரபஞ்சத்தின் உயிர்சக்தியாக வர்ணிக்கப் பட்டதுடன் சடங்குகளில் முக்கியமானதான யாகங்களைச் செய்வதற்கு சரியான காலம் அதாவது திதி மற்றும் நட்சத்திரம் அவசியமாகவும் கருதப் பட்டது. இதனால் வானியல் கணிப்புக்கள் துல்லியமாக வளர்ச்சியடைந்தன. அதர்வ வேதத்தில் காலம், பருவங்கள் மற்றும் வானச் சுழற்சிகள் மனித வாழ்க்கையுடன் இணைக்கப் பட்டன. ஜோதிடம் வானியலின் அடித்தளமாக அமைந்தது. சந்திரனை அடிப்படையாகக் கொண்ட காலக் கணிப்பில் திதிகள் மற்றும் 27 அல்லது 28 நட்சத்திரங்கள் (Lunar Mansions) வகுக்கப் பட்டன. இந்தியாவின் முதல் விஞ்ஞானபூர்வனான நாட்காட்டி பொறிமுறையான இதில் ஒரு வருடத்தின் முதல் 6 மாதம் உத்தராயணம் என்றும் இறுதி 6 மாதம் தட்சிணாயம் என்றும் வகுக்கப் படட்து.
நவீன வானியலின் படி பூமியின் துணைக் கோளான சந்திரன் தன்னைத் தானே ஒருமுறை சுற்றவும், பூமியை ஒருமுறை சுற்றி வரவும் ஒரேயளவு காலத்தை எடுத்துக் கொள்கின்றது. இக்காலப் பகுதி அதாவது நட்சத்திர மாதம் (Sidereal day) 27.3 பூமி நாட்களாகும். இந்த 27 நாட்களிலும் 27 நட்சத்திரங்கள் அச்சுவினி முதல் ரேவதி வரை பொருந்துவதாகக் கணிக்கப் படுவதுடன் திதிகளும் கணிக்கப் படுகின்றன. சுக்லபட்சம் (வளர்பிறை) என்பது அமாவாசைக்குப் பிறகு தொடங்கி பௌர்ணமி வரை சந்திரன் வளர்ந்து வரும் 15 நாட்கள்; கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்பது பௌர்ணமிக்குப் பிறகு அமாவாசை வரை சந்திரன் தேய்ந்து வரும் 15 நாட்கள்; திதி என்பது சந்திரனின் இந்த 15-15 நாள் சுழற்சியில் உள்ள ஒவ்வொரு நாளையும் குறிக்கும் (பிரதமை முதல் அமாவாசை/பௌர்ணமி வரை), இது பஞ்சாங்கத்தின் முக்கியப் பகுதியாகும், ஒவ்வொரு திதிக்கும் உரிய தெய்வங்கள் உண்டு
சந்திர கிரகணத்தை ராகு மற்றும் கேது மூலம் நிழல் புள்ளிகளாக (Lunar nodes) விளக்கப் பட்டுள்ளது. நவீன வானவியலில் இந்த ஒப்புமை வேறு விதமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப் படுகின்றது. ஒரு வருடம் சராசரியாக 365 நாட்கள் என்பதும் வேதகால வானியலில் கணிக்கப் பட்ட ஒன்றாகும். இது தவிர, க்ஷணம், முகூர்த்தம், அஹோராத்திரம் (பகல் – இரவு) மாதம், வருடம், யுகம் என்றும் நேர அலகுகள் வகுக்கப் பட்டுள்ளன. பெரிய கால அளவுகள் யுகம், மன்வந்தரம் மற்றும் கல்பம் (4.32 பில்லியன் ஆண்டுகள்) எனவும் வரையறுக்கப் பட்டுள்ளன. இது பிரபஞ்சத்தின் தோற்றத்துக்குக் காரணமான பிக்பேங் எனப்படும் பெருவெடிப்பில் இருந்தான நவீன காலக் கணிப்புடன் நெருக்கமாக உள்ளது.
வேத கால இந்தியர்கள் வானத்தை முறையாகப் பார்வையிட்டனர், காலத்தைக் கணிதமாகக் கணித்தனர், வானியலை மதம், அறிவியல் மற்றும் வாழ்க்கையுடன் இணைத்தனர். இவர்களது வானியல் சார்ந்த அடிப்படை அறிவுக்குச் சான்றாக சூரிய சித்தாந்தம், ஆர்யபட்டர் மற்றும் வராஹமிஹிரர் போன்றவர்களது நூல்கள் விளங்குகின்றன. சூரிய சித்தாந்தத்தை எடுத்துக் கொண்டால்,
கிரகங்களின் இயக்கம் (சூரியன், சந்திரன், 5 கண்ணுக்குத் தெரியும் கிரகங்கள்) குறித்து கணித விதிகள்.
சூரிய ஆண்டு ≈ 365.256 நாட்கள் – நவீன மதிப்பிற்கு மிக அருகில்.
சைன் அட்டவணை (Trigonometrical sine table) – இந்திய கணித–வானியலின் அடித்தளம்.
கிரகணம்: ராகு–கேது = Lunar/ Solar Nodes (நிழல் காரணம்).
காலக் கணிப்பு: திதி, மாதம், அயனம், யுகக் கணக்குகள்.
ஆகியவை பற்றிய குறிப்புக்கள் காணப் படுகின்றன. இதனால் மனித இன வரலாற்றில் வானியல் அவதானம் மற்றும் கணிதம் இணைந்த முழுமையான முதல் நூலாக சூரிய சித்தாந்தைக் கூற முடியும். ஆர்யபட்டரின் பங்களிப்பு பற்றி நோக்கினால்,
பூமி தன்னைத்தானே சுழலுகிறது → பகல்–இரவு (Revolution அல்ல, Rotation).
சூரிய மைய அணுகுமுறை (Heliocentric idea) – கிரக இயக்க விளக்கம்.
π ≈ 3.1416 – மிகத் துல்லியமான மதிப்பு.
கிரகணம் – சூரியன்/சந்திரன்/பூமியின் நிழல் விளைவு (மித்யை அல்ல).
ஆர்யபட்டீயம் – வானியல் + கணித சூத்திரங்கள்
இவரது கூற்றுக்கள் மேலோட்டமான நம்பிக்கை இன்றி விஞ்ஞான ரீதியிலான விளக்கமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கொப்பர்நிக்கஸ் பூமி தான் சூரியனைச் சுற்றி வருகின்றது என்று சொல்வத்ற்கு ஆயிரக் கணக்கான வருடங்கள் முன்னதாகவே இந்திய தத்துவ ஞானியான ஆரியபட்டா இக்கருத்தைத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது
எமது வானில் நாம் காணும் நட்சத்திரங்களை எடுத்துக் கொண்டால் அவை பெரும்பாலும் 88 நட்சத்திரத் தொகுதிகளாக வகுக்கப் பட்டுள்ளன. இது இறுதி அதிகாரப் பூர்வ எண்ணிக்கை என்பதுடன் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு தொகுதியில் (Constellation) மாத்திரமே சேர்க்கப் பட்டுள்ளன. இவை வான வரைபட எல்லைகள் (Sky regions) வடிவம் மட்டுமல்ல. இது முழு வானத்தையும் பிரிக்கும் அறிவியல் வரை படமாகும்.
88 நட்சத்திரத் தொகுதிகள் – முழுப் பட்டியல்
ராசி (Zodiac) நட்சத்திரத் தொகுதிகள் – 12
(சூரியன் தோன்றும் பாதை – Ecliptic)
வடக்கு வானகோள நட்சத்திரத் தொகுதிகள் – 36
தெற்கு வானகோள நட்சத்திரத் தொகுதிகள் – 40
விலங்குகள் / புராண அடிப்படையிலானவை (எடுத்துக்காட்டுகள்)