Subscribe to get access
Read more of this content when you subscribe today.
Read more of this content when you subscribe today.

பிரபஞ்சவியலில் (Cosmology) அண்டங்களில் (Galaxies) தென்படும் அசாதாரணமான இயக்கங்களுக்குக் காரணம் என்று கருதப் படும் கரும் பொருள் (Dark Matter) என்ற பதம் மும்மொழியப் பட்டு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு ஆகியுள்ள நிலையில் அதன் இருப்புக்கான ஆதாரம் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாசாவின் Fermi காமா கதிர் விண் தொலைக் காட்டி சமீபத்தில் அடையாளம் கண்ட அதிசக்தி காமா கதிர்களை அடிப்படையாகக் கொண்டு டோக்கியோ பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.. கரும்பொருள் துணிக்கைகள் மோதும் போதும் Read more

Nature Reviews Earth & Environment என்றபத்திரிகையில். வெளியாகி உள்ள சர்வதேச ஆய்வு ஒன்றில், உலகளாவிய அடிப்படையில் நிலப்பகுதிகளை விட மலைப் பிரதேசங்களில் நிலவும் காலநிலை மாற்றத்தின் தீவிரம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மலைப் பகுதிகளில் வாழும் மக்கள்அல்லது அதில் தங்கியிருப்பவர்கள் என பில்லியன் கணக்கான மக்களுக்கு மோசமான அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. EDCC எனப்படும் (elevation-dependent climate change) இந்த நிகழ்வின் விளைவாக மலைப் பிரதேசங்களின் உச்சியில் நிகழும் காலநிலை மாற்ற வேகம் Read more

பொதுவாக மனிதர்கள் தம்மை ஒரு பாம்பு அல்லது சிலந்தி கடித்தால் என்னவாகும் எனப் பயப்படுவது உண்டு. ஆனால் இதுவரை யாராவது ஒரு சிறிய கருந்துளை மனித உடலை ஊடறுத்துச் செல்ல முயன்றால் என்னவாகும் என சிந்தித்தது உண்டா? பழமையான கருந்துளை ஒன்று மனித உடலை ஊடறுத்துச் செல்ல முயன்றால் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆய்வு கரும் பொருள் (Dark Matter) தொடர்பான கல்விக்கு உதவக் கூடும் என்று சொல்லப் படுகின்றது. Primordial black holes அதாவது ஆதிகால Read more

விண்வெளியில் தனித்து விடப் பட்ட குள்ள அண்டம் (Dwarf Galaxy) ஒன்றினை சமீபத்தில் ஸ்பெயின் நாட்டு வானியலாளர்கள் தமது இரு மீட்டர் நீளமான இரட்டைத் தொலைக் காட்டியான TTT3 மூலம் அவதானித்து ஆழமான ஆப்டிக்கல் புகைப் படம் ஒன்றினைப் பெற்றுள்ளனர். நவம்பர் 10 ஆம் திகதி arXiv என்ற பத்திரிகை ஊடகத்தில் வெளியாகி உள்ள இது தொடர்பான தகவலில் இந்த அண்டத்தில் நட்சத்திரங்களின் தோற்றம் நிகழ்வது அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. 1883 இல் முதலில் கண்டுபிடிக்கப் பட்ட NGC Read more

விண்பூகோள ஒருங்கிணைப்பு வலது ஏற்ற இறக்கங்கள் குறித்த மேலதிக விபரங்கள் மற்றும் விண்பூகோளத்தின் எந்தவொரு நட்சத்திரம் அல்லது வேறு பொருளின் திருத்தமான இருப்பை அறிவது எவ்வாறு என்பது போன்ற தகவல்களைப் பார்க்கும் முன்னர் வானியலின் சில அடிப்படைத் தகவல்களை எளிய தமிழில் காண்போம்.. வானில் கண்ணால் பார்க்கக் கூடிய அனைத்துப் பொருட்களினதும் இயக்கம் குறித்த விஞ்ஞானமே வானியலாகும். நவீன மனிதன் இந்தப் பார்வையை மிகவும் கூர்மையானதாக மாற்றி வருகின்றான். அதாவது வானியல் ஆய்வைத் தமது தொழிலாகக் கொண்டுள்ள Read more

சற்று பெரிய விண்கல் அல்லது பெரியதொரு குறுங்கோள் (Comet) எனவும் அழைக்கப் படக்கூடிய 3I/ATLAS என்ற வால்வெள்ளி சமீபத்தில் சூரியனை அண்மித்தது. இவ்வருடம் கோடைக் காலத்தில் முதன் முதலில் அவதானிக்கப் பட்ட குறித்த இந்த குறுங்கோள் சமீபத்தில் சூரியனை அண்மித்த போது அதன் வேகம் அதிகரித்ததுடன் (ஆர்முடுகல் – Acceleration) அதன் நிறமும் நீல நிறத்தில் மாறியிருந்தது அவதானிக்கப் பட்டுள்ளது. 3I/ATLAS இன் வேக அதிகரிப்புக்கு ஈர்ப்பு சக்தி காரணம் இல்லை என அறியப் பட்டது ஐன்ஸ்டீனின் Read more

கிரிமியன் விரிகுடாவில் உள்ள தொல்பொருள் ஆய்வுப் பகுதியான ஸ்டார்சேலே இல் அண்மையில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கிடைத்த அரிதான DNA சான்றுகளின் மூலம் நியண்டெர்தால் மனித் மூதாதை இனம் ஐரோப்பாவில் இருந்து ஆசியாவுக்கு இடம்பெயர்ந்ததற்கு வலுவான ஆதாரம் கிடைத்துள்ளது. மத்திய மேல் பேலியோலித்திக் காலப் பகுதி என அறியப் படும் இந்தக் காலப் பகுதியில் தான் நியாண்டெர்தால் மனித இனத்தின் மறைவும், நவீன மனிதனின் முன்னோடி இனமான ஹோமோ சேப்பியன்ஸ் பூமியில் ஆதிக்கம் செலுத்தவும் தொடங்கியது Read more

கடந்த தொடர்பில் கதிர்வீச்சுக்கள் தொடர்பான சில தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி.. இரசாயனவியலின் அடித்தளம் மூலகங்கள் (Elements) ஆகும். அணுக்கரு : நம் கண்ணுக்குத் தெரியும் சின்னஞ்சிறு உலகம் : பகுதி 7 எம்மைச் சுற்றி இருக்கும் பதார்த்தங்களின் மிகப் பெருமளவு இந்த மூலகங்களின் சேர்க்கையாக உள்ளது. இதிலும் முக்கியமாக கார்பன், ஹைட்றஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் வெவ்வேறு விதங்களில் இணைந்து பல பதார்த்தங்களாக (Substance) உருவாகி உள்ளன. 20 ஆம் நூற்றாண்டு உதயமாகும் வரை அணுக்களை Read more

வடக்கு கடலின் தென் பகுதியில் அமைந்துள்ள சில்வர்பிட் பள்ளத்தாக்கு (Crater) எவ்வாறு தோன்றியிருக்கலாம் என கடந்த ஒரு தசாப்தமாக விஞ்ஞானிகள் மத்தியில் நிலவி வந்த விவாதம் முடிவுக்கு வந்துள்ளது. 43 தொடக்கம் 46 மில்லியன் வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் வீழ்ந்த விண்கல் அல்லது வால்வெள்ளி காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கு புதிய சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன. டாக்டர் உயிஸ்டீன் நிக்கல்சன் என்ற எடின்பர்க் பல்கலைக் கழக விஞ்ஞானி தலைமையில் மேற்கொள்ளப் பட்ட பூகோள ஆய்வு முறைகளான Seismic Read more

கடந்த தொடரில் பூமத்திய ரேகை, அட்சரேகை, தீர்க்க ரேகை போன்றவை குறித்தும் கிறீன்வீச் தீர்க்க ரேகை அடிப்படையாக வைத்து பூமியில் ஒவ்வொரு நாடுகளினதும் நேரங்கள் கணிக்கப் படுவது எவ்வாறு என்றும், இலையுதிர் கால மற்றும் வசந்த கால சம இரவு பகல்கள் குறித்தும் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி, நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 4 இத்தொடரில் விண்பூகோளங்கள் குறித்து மேலும் பார்ப்போம். பூமி தனது அச்சில் சுழல்வதால் புறத்தே காணப் படும் விண்பூகோளம் எதிர்த்திசையில் நகர்வது Read more