Subscribe to get access
Read more of this content when you subscribe today.
Read more of this content when you subscribe today.

சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்ட மிகப் பெரும் கருந்துளை மோதுகைகளின் விளைவாகத் தோன்றிய புதிய கருந்துளை சூரியனை விட 225 மடங்கு அதிக திணிவை உடையது ஆகும். இத்தகவல் அப்பகுதியில் இருந்து வரும் Gravitational Waves எனப்படும் ஈர்ப்பு அலைகள் மூலம் கண்டறியப் பட்டது. மேலும் இதுவரை அறியப் பட்ட இது போன்ற மிக வலுவான மோதுகைகளில் இதுவே வலிமை மிக்கது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. மிகவும் தீவிரமான இந்த மோதுகையின் அவதானிப்பு மூலம் தெரிய வருவது என்னவென்றால் Read more

மின்சார வாகனங்களுக்கான தொடர்ச்சியான மாற்றத்தை ஆதரிக்கவும், புவி வெப்பமயமாவதைத் தூண்டும் பச்சை வீட்டு விளைவு வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கவும், பொறியாளர்கள் அதிக ஆற்றலைச் சேமிக்கக்கூடிய பேட்டரிகளை உருவாக்க முயற்சித்து வருகின்றனர், அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் வகையிலும் இவை இயங்க வேண்டியதும் கருத்தில் கொள்ளப் படுகின்றது. இருப்பினும், பொதுவாக, உயர் ஆற்றல் கொண்ட பேட்டரிகள் நீண்ட சார்ஜிங் நேரங்களைக் கொண்டிருக்கின்றன, இது பெரும்பாலான நிஜ உலக பயன்பாடுகளுக்கு ஏற்றதல்ல. மேரிலாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் Read more

சமீபத்தில் உருவாக்கப் பட்ட mRNA தடுப்பூசி மூலம் எயிட்ஸ் நோய்க்கான HIV கிருமிக்கு எதிராக ஸ்திரமான நோய் எதிர்ப்பு சக்தியை நோயாளிகளிடம் ஏற்ப்டுத்தியுள்ளது. ஆரம்ப கட்ட சோதனைகளில் மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் புரதங்களுக்கு எதிரான நுண்ணுயிர் எதிர்ப்பை (Antibodies) ஐ ஏற்படுத்தும் இரு தடுப்பூசிகள் போடப் பட்ட போது அதில் 80% வீதமான பங்குபற்றுபவர்களுக்கு நல்ல மாற்றம் ஏற்பட்டது. இந்த ஒரு தடுப்பூசிகளுமே மனிதக் கலங்களின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றான mRNA தொழிநுட்பத்தால் உருவாக்கப் Read more

கடந்த தொடரில் Ecliptic மற்றும் Axial Tilt அதன் காரணமாக ஏற்படும் பருவ நிலை வேறுபாடுகள் மற்றும் Sidereal Day, Solar Day குறித்தும் சம இரவு பகல்கள் குறித்தும் பார்த்தோம். அதற்கான இணைப்பு : நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 3 பூமத்திய ரேகையுடன், Ecliptic இணையும் புள்ளிகளில் தான் இரு Equinoxes உம் அமைவது குறிப்ப்பிடத்தக்கது. இதுவும் Ecliptic பூமத்திய ரேகைக்கு சமாந்தரமாக அல்லாது 23.4 பாகை கோணம் சாய்வில் அமைந்திருப்பதற்கு ஒரு சான்றாகும். Read more

கடந்த தொடரில் X கதிர்கள் தொடர்பாகவும், x கதிரினை வெளியிடும் தனிமங்களின் முக்கியத்துவம் மற்றும் சுயமாக ஒளிரும் ரேடியம் தொடர்பிலும் பார்த்தோம். அதற்கான இணைப்பு – Atomic Nucleus : Part 6 எலெக்ட்ரிக் சார்ஜ் குறித்து தொம்சன் ஆய்ந்து வந்த அதே நேரம் கதிர்வீச்சு தொடர்பில் முக்கிய கண்டுபிடிப்புக்களை ரதர்போர்டு நிகழ்த்தினார். நவீன கருவிகள் கண்டுபிடிக்கப் பட முன்பே கதிர்வீச்சில் இரு வகைகளை அவர் கண்டறிந்தார். மிக அதிக அயனியாக்க (Ionizing) தன்மை கொண்டதும் மிக Read more

கலிபோர்னியாவின் இர்வினே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் புதிய வகை குவாண்டம் சடத் தன்மையைக் (New State of Quantum Matter) கண்டறிந்துள்ளனர். இந்த சடத் தன்மையைக் கொண்டுள்ள ஒரு பதார்த்தம் தன்னைத் தானே சார்ஜ் செய்து கொள்ளக் கூடிய ஒரு கணணி மற்றும் நீண்ட தூர விண்வெளிப் பயணங்களில் நின்று நீடிக்கக் கூடிய தன்மை ஆகிய சாதனைகளை நிகழ்த்தக் கூடிய புதிய யுகத்துக்கு வழி வகுத்துள்ளது. இந்தப் புதிய வகை சடப்பொருள் தண்ணீரைப் போன்றே திரவ, Read more

ஜூலை 1 ஆம் திகதி சூரியனை நோக்கி விரைந்து வந்த வித்தியாசமான விண்பொருளான 3I/ATLAS, ஓர் ஏலியன் ஓடமாக இருக்கும் தன்மைகளைக் கொண்டிருந்தது என வானியலாளர்கள் தற்போது தெரிவித்துள்ளனர். இதுவரை 3 விண்வெளி பொருட்களே (Interstellar objects) இவ்வாறு அவதானிக்கப் பட்டு வகைப் படுத்தப் பட்டுள்ளன. இவை அனைத்தும் சூரிய குடும்பத்துக்கு வெளியே இருந்து சூரியனை நோக்கி வந்து சென்றுள்ளன. இத்தன்மை தான் இவற்றை ஏலியன் ஓடங்கள் என ஐயம் கொள்ள முதற் காரணியாக உள்ளது. மணிக்கு Read more

கடந்த தொடரில் Ecliptic என்றால் என்னவென்பது குறித்தும் லீப் வருடம் குறித்தும் Transit நிகழ்வு குறித்தும் முக்கியமாகப் பார்த்தோம். அதற்கான இணைப்பு – நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 2 சூரியனைப் பூமி 23.4 பாகை கோணத்தில் சாய்ந்த நிலையில் தான் சுற்றி வருகின்றது. அதாவது பூமியின் வட தென் துருவ அச்சானது Ecliptic இற்கு செங்குத்தாக அமைந்திருக்கவில்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால் பூமியின் கிடை அச்சான Equatorial Plane, Ecliptic உடன் இணைந்து காணப் படவில்லை. Read more

பூமியைக் காத்து வரும் ஓசோன் மண்டலத்துக்கு மீண்டும் ஒரு சவாலை ஏற்படுத்தியுள்ளன செய்மதிகளை அதிகளவில் சுமந்து செல்லும் ராக்கெட்டுக்கள். ஒசோன் அடுக்கின் மீள் பரிமாணத்தை மெதுவாக்கும் இந்த ராக்கெட்டுக்களால் பாரிய ஆபத்து இருப்பதை மனித இனம் குறைவாக மதிப்பிட்டிருப்பதாக சான்ட்ரோ வட்டியோனி என்ற சுற்றுச் சூழலியலாளர் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக பூமியின் கீழ் ஒழுக்கில் நிலை நிறுத்தப் படும் விதத்தில் பல சர்வதேச நாடுகளால் ஏவப் படும் செய்மதிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இந்த செய்மதிகளை ஏவிச் Read more

ஹவாய் தீவில் அமைந்துள்ள ஜப்பானின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தின் தொலைக் காட்டியான சுபாரு அண்மையில் முக்கிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளது. அதாவது சூரிய குடும்பத்துக்கு வெளியே இருக்கும் கூறுகளின் தோற்றம், பரிணாமம் மற்றும் தற்போதைய கட்டமைப்பு என்பவற்றை ஆய்வு செய்ய தகுந்த ஒரு விண்பொருளை புளூட்டோ கிரகத்துக்கு அப்பால் கண்டுபிடித்துள்ளது. FOSSIL எனப்படும் சூரிய குடும்பத்துக்கு அப்பால் உள்ள விண் கூறுகளைக் கற்கும் ஆய்வொன்றின் பகுதியாகவே இந்த விண்பொருள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த Read more